தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநாடு பா.ம.க., மாவட்ட செயலாளர் அழைப்பு
கடலுார்: திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாட்டில் பங்கேற்க கடலுார் கிழக்கு மாவட்டத்தில் இருந்து 300 வாகனங்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:வேளாண் புரட்சியை ஏற்படுத்தவும், வேளாண் தொழிலை பாதுகாக்கவும் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மாநில மாநாடு திருவண்ணாமலையில் இன்று (21ம் தேதி) மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் அன்புமணி எம்.பி., ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.மாநாட்டில் கடலுார் கிழக்கு மாவட்டத்தில் இருந்து விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பா.ம.க., வினர் திரளாக பங்கேற்க 300 வாகனங்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலுார் கிழக்கு மாவட்டத்தில் இருந்து பண்ருட்டி - மடப்பட்டு - பெரியசவலை - திருக்கோவிலுார் புறவழிச்சாலை வழியாக திருவண்ணாமலை மாநாட்டிற்கு காலை 11.00 மணிக்கு புறப்பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.