உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கடலுார் வட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மருந்தாளுனர் சங்க மாவட்ட தலைவர் பொற்செழியன், நகராட்சி அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் செந்தில்குமார் செழியன், சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் பணிபுரியும் 3 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி