ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருத்தாசலம்: விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையில், நகர தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், நகர அவை தலைவர் செங்குட்டுவன், நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ், நகர துணை செயலாளர் நம்பிராஜன், மாவட்ட பிரதிநிதி பாண்டியன் முன்னிலை வகித்தனர்.நகர துணை செயலர் ராமு வரவேற்றார். நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் அசோக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உறுப்பினர்களுக்கு கையேடு மற்றும் உறுப்பினர் அட்டைகளை வழங்கினர். மாவட்ட நிர்வாகிகள் அறிவுடைநம்பி, குருசரஸ்வதி, வழக்கறிஞர்கள் அருள்குமார், ரவிச்சந்திரன், இளைஞரணி நிர்வாகிகள் குமார், நிஷாந்த், கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.