தடகளத்தில் தங்கம் வென்று தமிழக அணி சாதனை
மந்தாரக்குப்பம்: ஒடிசாவில் நடந்த தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் தமிழக அணி முதலிடம் பிடித்தது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், 40 வது தேசிய ஜூனியர் தடகளப்போட்டி சமீபத்தில் நடந்தது. 18 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, மஹாராஷ்டிரா,பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் தமிழக அணி சார்பில் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஹரிகரன் உள்ளிட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்று திறமையை வெளிபடுத்தினர். அனைத்து போட்டி முடிவுகளில் தமிழக அணி முதலிடத்தை பிடித்து தங்கம் வென்று சாதனை படைத்தது. இரண்டாம் இடத்தை மத்தியபிரேதசம் அணியும், பீகார் அணி மூன்றாம் இடத்தையும் வென்றது. இதில் மாணவர் ஹரிகரன் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து தமிழக அணிக்கு பெருமை சேர்த்துள்ளார். தமிழக அணி சார்பில் கடலுார் மாவட்டத்தில் இருந்து போட்டியில் பங்கேற்று தங்கம் பதக்கம் பெற்ற ஹரிகரனை எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார். மேலும் மாவட்ட தடகள சங்க செயலாளர் கோபாலகிருஷண்ன், பொருளாளர் அசோகன், இணை செயலாளர் பாபு, தடகள பயிற்சியாளர் ஜேம்ஸ், ரவிச்சந்திரன் உட்பட பலர் பாராட்டினர்.