உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பணி நிரவல் முறையில் இடமாறுதல்; டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

பணி நிரவல் முறையில் இடமாறுதல்; டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

கடலுார் : டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரவல் முறையில் உடனடியாக இடமாறுதல் செய்ய வேண்டும் என அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறினார்.இதுகுறித்து கடலுாரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு டாஸ்மாக் கடைகளில் மதுபான காலி பாட்டில்களை பெறும் பணிக்கு தனியாக ஒரு பணியாளர் நியமிக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரவல் முறையில் இடமாறுதல் கோரி, மேலாண்மை இயக்குனரிடம் பல முறை மனு அளித்தும் இதுநாள் வரை மாறுதல் செய்யப்படவில்லை. மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டும், மாவட்ட மேலாளர்கள் உத்தரவை மதிக்காததை, பணியாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பணியாளர்களை பணி நிரவல் முறையில் இடமாறுதல் செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக மன உளச்சலுக்கு ஆளாவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். பணியாளர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் அனைத்து பணியாளர்களுக்கும் முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை