மேலும் செய்திகள்
மணல் கடத்தியவர் கைது
05-Apr-2025
புவனகிரி; புவனகிரி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.புவனகிரி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாத்தப்பாடி பஸ் நிறுத்தம் அருகே வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் எந்தவித அனுமதி இல்லாமல், ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இது குறித்து குறிஞ்சிப்பாடி டி. பாளையம் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த லோகநாதன் மகன் பாஸ்கர், 28; மீது வழக்குப் பதிந்து, ஆற்று மணலுடன் டாடா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
05-Apr-2025