உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாரஸ் லாரி டயர் வெடித்து வாலிபர் விரல் துண்டானது

டாரஸ் லாரி டயர் வெடித்து வாலிபர் விரல் துண்டானது

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் டாரஸ் லாரி டயர் வெடித்து சாலையோரம் நின்றிருந்த வாலிபரின் விரல் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விருத்தாசலம், கடலுார் சாலையில் மதியம் 2:00 மணியளவில் சென்ற டாரஸ் லாரியின் பின்புற டயர் வெடித்தபோது, சாலையில் கிடந்த கருங்கல் சிதறி தெறித்தது. அப்போது, அங்கு நின்றிருந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் இடது கை விரலில், கருங்கல் சிதறி, அவரது நகத்துடன் விரல் பகுதி துண்டானது.அதிக சப்தத்துடன் டயர் வெடித்த நிலையில், தனது மொபைல்போன் வெடித்து காயம் ஏற்பட்டதாக கருதிய வாலிபர், மொபைலை துாக்கி வீசினார். அங்கிருந்தவர்கள் அவரிடம் விசாரித்தபோது, டயர் வெடித்து சிதறிய கருங்கல் பட்டு, விரல் துண்டானது உறுதியானது.படுகாயமடைந்த அவரை, அங்கிருந்த நபர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. காயமடைந்த நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை