உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டின் முன் வீசப்பட்ட டெய்லர் உடலால் பரபரப்பு

வீட்டின் முன் வீசப்பட்ட டெய்லர் உடலால் பரபரப்பு

பெண்ணாடம்:பெண்ணாடத்தில், இறந்த நிலையில் டெய்லர் உடலை, அவரது வீட்டின் முன் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். கடலூர் மாவட்டம், பெண்ணாடம், கருப்பன் குட்டை பாதை தெருவை சேர்ந்தவர் நந்தகுமார், 55. இவர் வீட்டின் முன், தையல் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி, 45, மகன் பாலாஜி, 25. இருவரும் நேற்று இரவு வீட்டில் இருந்தனர். இரவு, 10:00 மணியளவில், அவரது வீட்டு வாசலில், தலையில் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் நந்தகுமார் உடலை, சிலர் ஆட்டோவில் இருந்து இறக்கி வீசிவிட்டு சென்றனர். அவரது மனைவி வெளியே வந்து பார்த்தபோது, நந்தகுமார் இறந்து கிடந்தது தெரிந்தது. பெண்ணாடம் போலீசார் விரைந்து நந்தகுமார் உடலை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதேனும் காரணமா என, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !