மேலும் செய்திகள்
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
கடலுார்: கடலுார் அரசு தலைமை மருத்துவமனையின் கிளை நுாலகத்தில், நுாலக வாசகர் வட்டம் சார்பில் ஆசிரியர் தின விழா நடந்தது. வாசகர் வட்டத் தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் மனோகரன் வரவேற்றார். ஆலோசகர் முத்துக்குமரன், டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் பேசினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் ரவியின் 36 ஆண்டுகால பணியை பாராட்டி, கல்வி சேவைக்கான விருது வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, ஆசிரியை வெற்றிச்செல்வி, அருள்ஒளி, ஓய்வு பெற்ற ஆசிரியர் அருள்ஜோதி, வெங்கடேசன், அண்ணாமலை வாழ்த்திப் பேசினர். மாவட்ட தமிழ்ச்சங்க துணைத்தலைவர் சிவக்குமரன், பேராசிரியர் சிவக்குமார், குழந்தைவேல், உதயா வெங்கடேசன், கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் பார்த்திபன் நன்றி கூறினார்.
05-Sep-2025