மேலும் செய்திகள்
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
தேனியில் ஆசிரியர் தின விழா
06-Sep-2025
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடந்தது. அரிமா சங்க தலைவர் அருள்வாசகம் தலைமை தாங்கி, உதவி தலைமை ஆசிரியை கலையரசி உட்பட ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். மாவட்ட தலைவர்கள் அருள்முருகன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் பழனிவேல் முருகன் வரவேற்றார். விழாவில், பு.முட்லுார் அட்சயாமந்திர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் புருஷோத்தமன், உதவி தலைமை ஆசிரியர் மான்விழி, அரிமா சங்க செயலாளர் நடராஜன், நிர்வாகிகள் மனோகரன், ஹவுஸ் ஹமீது மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
05-Sep-2025
06-Sep-2025