உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர் தின விழா

ஆசிரியர் தின விழா

மந்தாரக்குப்பம்: கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் அந்தோணிஜோசப் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வடலுார் டி.ஆர்.எம் ., சாந்தி பர்னிச்சர்ஸ் உரிமையாளர் ராஜமாரியப்பன் பங்கேற்று ஆசிரியர்களுக்கு   பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினார். மேலும் பள்ளிக்கு ஸ்பீக்கர் பாக்ஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்களை பெருமைபடுத்தும் விதமாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை