உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி மாணவர்களுக்கு பதக்கம் வழங்கல்

டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி மாணவர்களுக்கு பதக்கம் வழங்கல்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நடந்த டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. விருத்தாசலம் விருத்தாம்பிகை கல்வி நிறுவனத்தில், மாவட்ட அளவிலான 6வது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. சங்கத் தலைவர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக இயக்குனர் ரஞ்சித், சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளி தாளாளர் அரிமா சுந்தரவடிவேல், டாக்டர் இ.கே.சுரேஷ் கல்விக்குழும தலைவர் சு ரேஷ், சிதம்பரம் ஏ.ஆர்.ஜி., பள்ளி முதல்வர் கீதா கணேசன், செல்வகுமார், வழக்கறிஞர் மணிகண்ட ராஜன் வாழ்த்திப் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் மற்றும் சுழற்கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், தங்கம், வெள்ளி பதக்கங்கள் பெற்ற மாணவர்கள், திருவாரூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும், விருதை டேக்வாண்டோ கிளப் மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருது பெற்றனர். மாவட்ட பொருளாளர் செந்தில்முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி