வேளாண் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி
விருத்தாசலம்: திருச்சி அடுத்த சமயபுரத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள், கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியில் நேற்று மண்டல ஆராய்சி நிலையத்தில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, துறை தலைவர் பாஸ்கரன், மாணவர்களுக்கு வேளாண் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார். தொடர்ந்து, பூச்சியியல் விஞ்ஞானி சிவராமன் பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல்கள், நோய்கள் மற்றும் அவற்றுக்கான மேலாண்மை முறை குறித்து விளக்கினார். மேலும், ஒருங்கிணைந்த பண்ணைய முறை, ஜப்பானிய காடை வளர்ப்பு, வாத்து வளர்ப்பு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.