விதை உற்பத்தி குறித்து தொழில்நுட்ப பயிற்சி
விருத்தாசலம், : பரங்கிபேட்டை அடுத்த சின்னகுமட்டி கிராமத்தில் எண்ணெய் வித்து பயிர்களில் ஆதிதிராவிட உழவர்களுக்கான பங்கேற்பு முறை விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, பயிற்சியை துவக்கி வைத்தார்.வேளாண் அதிகாரி கலைச்செல்வி எண்ணெய் வித்து பயிர்களில் உழவியல் தொழில் நுட்பங்கள் குறித்தும், பாரதிகுமார் எண்ணெய் வித்து பயிர்களில் புதிய ரகங்கள் குறித்தும், கண்ணன் எண்ணெய் வித்து பயிர்களில் மதிப்பு கூட்டுதல் பற்றியும், ஜெயகுமார் எண்ணெய் வித்து பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.பயிற்சியில் தேசிய உர நிறுவனம் சார்பில் உதவி மோலாளர் ரகுபதிராஜா கலந்துகொண்டு இயற்கை உரங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.