உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் திருட்டு வாலிபர் கைது

பைக் திருட்டு வாலிபர் கைது

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் மாதேஷ், 24. இவர் கடந்த 1ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கடைவீதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சென்ற பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காணாமல் போன மாதேஷ் பைக் என தெரியவந்தது. பைக்கை திருடிச் சென்றவர், திருவெண்ணுநல்லுார் சரவணபாக்கம் கிராமத்தை சேர்ந்த உதயா. 24, என்பதும், மாதேஷ் பைக்கை திருடியதை ஒப்புக்கொண்டார். அதையடுத்து, உதயாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை