தேய்பிறை அஷ்டமி பூஜை
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர்,மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று இரவு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு நேற்று இரவு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் திரளாக காலபைரவரை வழிபட்டனர்