கோவில் உண்டியல்கள் உடைப்பு மங்கலம்பேட்டையில் துணிகரம்
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை, ஊமங்கலம் சாலையோர கோவில்களில் உண்டியல்களை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.விருத்தாசலம் - மங்கலம்பேட்டை நெடுஞ்சாலையோரம், விஜயமாநகரம் மதுரை வீரன் மற்றும் கோ.பூவனுார் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் உண்டியல்கள் நேற்று காலை உடைக்கப்பட்டிருந்தன.தகவலறிந்த மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இது தொடர்பாக அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.இதேபோல், விருத்தாசலம் அடுத்த ஊமங்கலத்தில் இரண்டு கோவில்களிலும் உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் பணம், காணிக்கை பொருட்கள் எதுவும் திருடுபோகவில்லை.மர்ம நபர்களின் கைவரிசையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.