உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் உடல் கரை ஒதுங்கியது

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் உடல் கரை ஒதுங்கியது

புதுச்சத்திரம்: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் உடல் நேற்று கரை ஒதுங்கியது. புதுச்சத்திரம் அடுத்த பெத்தான் குப்பத்தைச் சேர்ந்தவர் மணிவேல், 60; இவர் நேற்று முன்தினம் பெத்தான்குப்பம் - திருச்சோபுரம் இடையே உள்ள பரவனாற்று கரையோரம், மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மாடு தண்ணீரில் இறங்கியது. மாட்டை கரைக்கு கொண்டுவர ஆற்றில் இறங்கியவர், ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மணிவேல் உடல் கம்பளிமேடு பாலம் அருகே நேற்று கரை ஒதுங்கியது. புதுச்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !