இணைப்பு சாலை கந்தல்; சீரமைக்க நடவடிக்கை தேவை
விருத்தாசலம் : எ.வடக்குப்பம் - எருமனுார் கிராம இணைப்பு சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விருத்தாசலம் அடுத்த எ.வடக்குப்பம் - எருமனுார் கிராம இணைப்பு சாலை வழியாக தனியார் பள்ளி பஸ், வேன், டிராக்டர், டெம்போ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இந்நிலையில், 2 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தற்போது, சாலை பராமரிப்பின்றி ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.இதனால், சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். வாகனங்கள் பழுது ஏற்படுவதுடன் ஓட்டுனர்களுக்கு உடல்வலி ஏற்படுகிறது. எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.