மேலும் செய்திகள்
கெரசினுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
01-Oct-2024
கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு வாலிபர் குடும்பத்துடன் விஷப்பாட்டில் எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த போரூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுராமன், 32; இவர், நேற்று மதியம் அவரது தாய் தேவகி, சகோதரி ரேவதி ஆகியோருடன் கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு அழுதபடி, விஷப்பாட்டிலுடன் வந்தார். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விஷப்பாட்டிலை பிடுங்கி, விசாரணை நடத்தினர்.விசாரணையில், ரகுராமன் குடும்பத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் இடையே இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், அவர்கள் ரகுராமன் தாயை தாக்கியுள்ளனர். இது குறித்து சோழத்தரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தது தெரியவந்தது. இதையடுத்து விஷப்பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்று போலீசார் அறிவுரை கூறி, அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்த பின் அவரை அனுப்பிவைத்தனர். .இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
01-Oct-2024