உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீஸ் பாதுகாப்பு கேட்ட பேரூராட்சி கவுன்சிலர்

போலீஸ் பாதுகாப்பு கேட்ட பேரூராட்சி கவுன்சிலர்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அருகே பேரூராட்சி கூட்டத்தில் பங்கேற்க போலிஸ் பாதுகாப்பு வழங்க கோரி, அ.தி.ம.க., கவுன்சிலர் மனு அளித்துள்ளார்.நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் அ.தி.மு.க., கவுன்சிலராக இருப்பவர் அர்ச்சுணன் இவர், நேற்று நெல்லிக்குப்பம் போலீசில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார். அதில், நான் பேரூராட்சி 3 வது வார்டு கவுன்சிலராகவும் மன்றத்தின் எதிர்கட்சி தலைவராகவும் உள்ளேன்.கடந்த மாதம் நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில், பேரூராட்சியில் நடக்கும் தவறுகள் பற்றி கேள்வி கேட்டேன். இதனால் கூட்டம் முடிந்து வெளியே வந்த என்னை பொதுமக்கள் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் தாக்க முயன்றார்.இந்நிலையில், இன்று (24ம் தேதி) பேரூராட்சி மன்ற கூட்டம் நடக்க உள்ள நிலையில், அதில் கலந்து கொள்ள எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளார்.பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள, கவுன்சிலர் போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ