பஞ்சராகி நின்ற பஸ் பயணிகள் அவதி
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே அரசு பஸ் டயர் பஞ்சராகி நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர்.கடலுாரில் இருந்து விலங்கல்பட்டு, நடுவீரப்பட்டு வழியாக பத்திரக்கோட்டைக்கு அரசு பஸ் (தடம் எண் 37) இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று கடலுாரில் இருந்து காலை 10:00 மணிக்கு புறப்பட்டு நடுவீரப்பட்டு அருகே உள்ள வாண்டராசன்குப்பம் வந்தபோது முன்பக்க டயர் பஞ்சராகியது.இதனால் டிரைவர் விபத்து ஏற்படாமல் சாலையின் ஓரமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டார்.இதனால் பஸ்சில் வந்த பயணிகள் இறங்கி நடுவீரப்பட்டு வரையில் நடந்தே செல்ல வேண்டிய நிலையில் அவதியுற்றனர்.