உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சங்க நிர்வாகி கூரை வீடு எரிந்து சேதம்

சங்க நிர்வாகி கூரை வீடு எரிந்து சேதம்

நெல்லிக்குப்பம்: நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டமைப்பின் செயலாளர் வீடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. நெல்லிக்குப்பம் கீழ்பாதியை சேர்ந்தவர் மெய்யழகன்.இவர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கங்களின் கூட்டமைப்பின் பொதுசெயலாளராக உள்ளார். இவரது கூரை வீடு நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ