மேலும் செய்திகள்
கடலுார் சி.கே.,பள்ளி மாணவர்கள் சாதனை
17-May-2025
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் ரூபிகா, சஞ்சனா ஆகியோர் 500க்கு 494 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம், லத்திகா, சுபஸ்ரீ 493 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ஹரிதர்ஷன், ஜெயசங்கரி 492 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். கணித பாடத்தில் 19 பேர், அறிவியல் பாடத்தில் 25 பேர், சமூக அறிவியல் பாடத்தில்19 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி செயலர் செந்தில்நாதன், முதல்வர் ஆர்த்தி சுரேஷ் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். ஆசிரியர்கள் தனவேல், பாக்கியராஜ், ஜெயந்தி, பாலசந்தர், லாவண்யா, விக்டர்ராஜ்உடனிருந்தனர்.
17-May-2025