மேலும் செய்திகள்
மணல் கடத்தியவர் கைது
10-Nov-2024
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ஆற்று மணல் திருடி வந்த டிராக்டர் டிப்பரை போலீசார் பறிமுதல் செய்தனர்.விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, கணபதிகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஆற்று மணல் அள்ளி வந்த டிராக்டர் டிப்பரை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது, அனுமதியின்றி வெள்ளாற்றில் மணல் அள்ளி வந்தது தெரிந்தது. 1 யூனிட் மணலுடன் டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் செல்வசுப்ரமணி, 23, என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
10-Nov-2024