உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் நுாலகத்திற்கு விடிவு

விருத்தாசலம் நுாலகத்திற்கு விடிவு

விருத்தாசலம் : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், விருத்தாசலத்தில் 1.7 கோடி ரூபாயில் கட்டி திறக்கப்பட்ட நுாலகம் பயன்பாட்டிற்கு வர தயாராகியுள்ளது. விருத்தாசலத்தில் 1955ம் ஆண்டு முதல், வாடகை கட்டடத்தில் கிளை நுாலகம் இயங்கி வருகிறது. இதையடுத்து, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் 1.7 கோடி ரூபாய் நிதியில் புதிதாக நுாலக கட்டடம் கட்டப்பட்டது.இதனை கடந்த மார்ச் 21ம் தேதி, கடலுாருக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால், நுாலகம் செல்ல பாதை வசதியின்றி, ஒரு மாதத்திற்கு மேலாகியும் புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதையடுத்து நுாலகத்திற்கு செல்ல மாவட்ட கல்வி அலுவலகத்தின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவரை அகற்றி, புதிய இரும்பு கேட் அமைக்கப்பட்டது. ஆனால், முகப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலில் சிமென்ட் சிலாப் இல்லாமல், புத்தகங்களை எடுத்து வரும் வாகனங்கள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் சொந்த செலவில் கழிவுநீர் வடிகால் மீது பாதை அமைத்து கொடுத்தார். இதனால் வாடகை கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு நுால்கள் மாற்றப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை