உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கந்தலான மலையாண்டவர் கோவில் சாலை நிதி ஒதுக்கியும் பணி துவங்காத அவலம்  

கந்தலான மலையாண்டவர் கோவில் சாலை நிதி ஒதுக்கியும் பணி துவங்காத அவலம்  

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் பிரசித்திப் பெற்ற மலையாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து அதிகளவு பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு செல்லும் மலைபாதையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து நடக்க முடியாத நிலையில் உள்ளது. சாலையை சரி செய்ய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை சாலையை சரி செய்ய அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் கோவிலுக்கு வகள் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள இச்சாலையில் பெயர்ந்துள்ள ஜல்லிகள் பக்தர்களின் காலை பதம் பார்த்து வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கோவில் மலையடிவாரத்தில் சுற்றி வர முதல்வர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவிலுக்கு செல்லும் மலை பாதையில் மட்டும் சாலை பணி கிடப்பில் உள்ளது. நிதி ஒதுக்கியும் ஏன் சாலைப் பணியை துவங்கவில்லை என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்பிரச்னை மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என பெகாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ