மேலும் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி
03-Jun-2025
விருத்தாசலம்: பூந்தோட்டம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று நடக்கிறது. விருத்தாசலம் பூந்தோட்டம் நல்லேரிக்கரையில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, தினசரி காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் வாகன வேடிக்கையுடன் அம்மன் வீதியுலா நடந்தது.இன்று (4ம் தேதி) தீமிதி திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு கழுமரம் ஏறுதல், 10:00 மணிக்கு அரவாண் களபலி நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடக்கிறது. நாளை 5ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 6ம் தேதி பட்டாபி ேஷகம், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
03-Jun-2025