உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளியில் திருட்டு

பள்ளியில் திருட்டு

திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த கீழக்கல்பூண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை, பள்ளி முடிந்து அனைத்து வகுப்பறைகளும் பூட்டப்பட்டது. மறுநாள் காலை ஸ்மார்ட் கிளாஸ் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது. பள்ளி காவலர் மகிமைதாஸ், பள்ளி தலைமையாசிரியர் உஷாவிற்கு தகவல் தெரிவித்தார்.இதுகுறித்து தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரில், ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி