உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவிலில் திருட்டு; போலீசார் விசாரணை

கோவிலில் திருட்டு; போலீசார் விசாரணை

கடலுார்; கடலுார் அருகே கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் அடுத்த நாணமேடு கிராமத்தில் ஐயனாரப்பன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் நேரில் விசாரித்தனர்.கோவிலில் இருந்த ஒன்றரை சவரன் நகை மற்றும் உண்டியலில் இருந்த காணிக்கை பணம் திருடுபோனது தெரிந்தது.இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி