உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆக்ரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகள்: மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

 ஆக்ரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகள்: மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

சேத்தியாத்தோப்பு: ஆக்கிரமிப்புகளை அகற்ற, வாய்க்கால் கரையோரம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பின் மையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காமராஜர் பாசன வாய்க்கால் உள்ளது.Gallery கி.மீ., துாரம் உள்ள, இந்த வாய்க்கால் கரையையொட்டி குடியிருப்புகள், கடைகள் உள்ளன. இந்த வாய்க்காலில், செடி கொடிகளை அகற்றி, பேரூராட்சி நிர்வாகம் துார்வாரி வருகிறது.இந்நிலையில், கரையோர கடைகளை இடித்து அகற்ற வேண்டும் என கூறி வருவாய்த்துறை நில அளவையர், வி.ஏ.ஓ., உள்ளிட்டோர் அங்கு அளவீடு செய்ய மதியம், 12:30 மணியளவில் சென்றனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு, வருவாய் அதிகாரிகளை முற்றுகையிட்டு தடுத்தனர்.சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., விஜிகுமார் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.அப்போது மக்கள், எந்த வித முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென அளவீடு செய்து கடைகளை இடிப்பதற்கு பேரூராட்சி நிர்வாக திட்டமிட்டுள்ளதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.டி.எஸ்.பி., விஜிகுமார் வாய்க்கால் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி விட்டு முற்றிலுமாக அளவீடு செய்யுமாறு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கூறினார். தொடர்ந்து, பொதுமக்கள் 1.15 மணியளவில் கலைந்து சென்றனர். அளவீடு செய்ய வந்த அதிகாரிகளும் அளவீடு செய்ய முடியாமல் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை