மேலும் செய்திகள்
தொழிலாளி தற்கொலை
10-Mar-2025
புவனகிரி : புவனகிரி தாலுகா, அத்தியாநல்லுார் சவுடுமண் குவாரியில் மண் எடுக்க அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருவர் தற்கொலைக்கு முயன்றதும், சமீபத்தில் ஒரு பூஜை நடத்திய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், இது தொடர்பாக இரு தரப்பு பிரச்னை உள்ள நிலையில், பேசி முடிவெடுக்க, நேற்று புவனகிரி தாலுகா அலுவகத்திற்கு சமாதான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்பேரில், அத்தியாநல்லுாரை சேர்ந்த 75 க்கும் மேற்பட்டவர்களும், சாமியார்பேட்டையை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகம் வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததை பார்த்த தாசில்தார் கணபதி, கிராமத்தில் நேரில் வந்து பேசி முடிப்பதாக கூறி திருப்பி அனுப்பினார். இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் புலம்பியபடியே திரும்பினர்.
10-Mar-2025