மேலும் செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி
17-May-2025
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி பிரம்மோற்சவம் கடந்த 29ம் தேதி துவங்கியது. தினமும் மகாபாரத சொற்பொழிவு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வீதியுலா நடந்தது. கடந்த 1ம் தேதி திருக்கல்யாணம், 4ம் தேதி பகாசூரனுக்கு அன்னமிடுதல் நடந்தது. நேற்று மாலை தீமிதி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நாளை பட்டாபிஷேகம் நடக்கிறது.
17-May-2025