உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்குறள் விழிப்புணர்வு பயிற்சி

திருக்குறள் விழிப்புணர்வு பயிற்சி

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம், பாரத ஸ்டேட் பாங்க் கிளையில், கடலுார் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் விழிப்புணர்வு பயிற்சிநடந்தது. நிகழ்ச்சிக்கு வங்கி கிளை மேலாளர் பரணிதரன் தலைமை தாங்கினார். உதவி மேலாளர் சோபியா வரவேற்றார். உலக திருக்குறள் பேரவை மாவட்டத் தலைவர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திருக்குறளின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். திருக்குறள் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகளை சிவகுமார், திவ்யா, பவித்ரா ஒருங்கிணைப்பு செய்தனர். வங்கி பணியாளர்கள் வெங்கடேசன், காந்தி, கண்ணன்வாழ்த்துரையாற்றினர். பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைத்து பணியாளர்களுக்கும், திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். லட்சுமி சாரதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ