உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பள்ளியில் திருக்குறள் விழா

அரசு பள்ளியில் திருக்குறள் விழா

கடலுார்: பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருக்குறள் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராமதாஸ் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் இசைமன்னன் வரவேற்றார். உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, திருக்குறள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து திருக்குறளின் முக்கியத்துவம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார். விழாவில் ஆசிரியர்கள் பாரி, கவியரசி, சித்ரா, ரேகா, புனிதவர்த்தினி, விஜயலட்சுமி, சரிதா வேல்முருகன் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சரவணமுருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !