உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிற்சி வகுப்பு

திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிற்சி வகுப்பு

கடலுார்: கடலுார் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை, கடலுார் மாவட்ட தமிழ் சங்கம் இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் ஒன்பதாம் நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட நுாலகத்தில் நடந்தது. கடலுார் மாவட்ட தமிழ் சங்க செய்தி தொடர்பாளர் சிங்காரம் தலைமை தாங்கினார். கலைப்பிரிவு செயலாளர் மனிதி வரவேற்றார். முதுநிலைவருவாய் ஆய்வாளர் சஞ்சய், குறலும் குறிப்புரையும் என்ற தலைப்பில் பேசினார். கடலுார் மாவட்ட தமிழ் சங்க செயலாளர் பேராசிரியர் ராஜா,திருக்குறள் திருப்பணித்திட்ட கண்காணிப்பு உறுப்பினர் துரையன், பொதுமறை திருக்குறள் பேரவை பொதுச்செயலாளர் அருள்ஜோதிவாழ்த்துரை வழங்கினர். பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை தலைவர் ராஜாவிற்கு, கேடயம் வழங்கி பாராட்டுதெரிவிக்கப்பட்டது. முத்தமிழ் கல்வி கலைப்பணி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முத்துக்குமரன், தமிழ்ச்சங்க துணைத் தலைவர் சிவக்குமரன், வெற்றிச்செல்வி, பள்ளிக்கல்வி ஆய்வாளர் அருள்ஒளி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்தியாகராஜன், மாவட்ட மைய நுாலக முதல்நிலை நுாலகர் ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ்ச்சங்க இணை செயலாளர் ராம ஜெகதீசன் நன்றிகூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை