மேலும் செய்திகள்
திருக்குறள் திருவிழா
14-Jan-2026
கடலுார்: கடலுார் செம்மண்டத்தில் உள்ள அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் உலக திருக்குறள் பேரவை சார்பி ல் திருக்குறள் கருத்தரங்கம் நடந்தது. பயிற்சி நிலைய முதல்வர் ஆதவ் புருஷோத் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் கமலக்கண்ணன், பயிற்சி அலுலர் சித்ரா முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் திருக்குறள் ஒப்புவித்தல், திருக்குறள் முற்றோதல், திருக்குறள் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டன. உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், வெற் றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஆசிரியர்கள் மாலதி, உமாமகேஸ்வரி, தீபா, திவ்யா, சுரேந்தர், ராம் பிரதீப், வெண்ணிலா உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் தணிகைவேல் நன்றி கூறினார்.
14-Jan-2026