உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அரசு பெண்கள் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்

 அரசு பெண்கள் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்

கடலுார்: கடலுார் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட தமிழ்ச்சங்கம் சார்பில் திருக்குறள் திருப்பணித்திட்ட பயிலரங்கம் நடந்தது. கடலுார், வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிலரங்கில் தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். தமிழாசிரியர் கங்கா வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கிளை தலைவர் தெரேசா கேத்தரின், மரபுவழி அக்குபஞ்சர் நிபுணர் ரம்யா வாழ்த்தி பேசினர். திருக்குறளில் 'அடக்கமுடைமை' என்ற தலைப்பில் மாவட்ட தமிழ் சங்கத் துணைத் தலைவர் ராசதுரை பேசினார். திருக்குறள் திருப்பணித்திட்ட கண்காணிப்பு உறுப்பினர் ஜானகிராஜா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சங்க துணை தலைவர் சிவக்குமரன், திருக்குறள் திருப்பணித்திட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் ஆறுமுகம், நடராஜன், நுாலக வாசகர் வட்ட கவுரவ தலைவர் இளங்கோவன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் முத்துகிருஷ்ணன், அருள்ஜோதி மற்றும் தவமணிகண்டன் பங்கேற்றனர். செயலாளர் சிங்காரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி