உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீபவாளி சீட்டு பிடித்தவர்கள் தங்க காசு தர முடியாமல் திணறல்

தீபவாளி சீட்டு பிடித்தவர்கள் தங்க காசு தர முடியாமல் திணறல்

த ங்கம் விலை வரலாறு காணாத உச்சத்திற்கு சென்றதால் தீபாவளி சீட்டு(பண்டு) பிடித்த பலர் தங்க காசு கொடுக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் தாங்களும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்கிற நோக்கத்தில், சிறுசேமிப்பு திட்டத்தை போல் மாதாமாதம் ஒரு சிறு தொகையை சீட்டு(பண்டு) கட்டி வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. 12 மாதங்கள் பணம் செலுத்திய பின்பு, பண்டிகைக்கு முன்பு சீட்டு பிடித்த ஏஜெண்டு சார்பில் பட்டாசு, எண்ணெய், சர்க்கரை, இனிப்பு என பல பொருட்கள் வாகனத்தில் கொண்டு வந்து வீட்டில் இறக்கப்படுகிறது. இன்னம் சிலர் ஒரு படி மேலேபோய் சீட்டு பணம் செலுத்துபவர்களுக்கு 'தங்க' காசுகள் வழங்கப்படும் என வாக்குறுதிகளை நோட்டீசில் அச்சடித்து வழங்கினர். ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாத துவக்கத்தில் ஒரு கிராம் 7 ஆயிரமாக இருந்த விலை தற்போது 12 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. சீட்டு பிடித்தவர்களால் வாடிக்கையாளர்களுக்கு வாக்குறுதி அளித்தது போல் தங்க காசுகளை வாங்கிக்கொடுக்க முடியாமல் திணறுகின்றனர். ஒரு ஆண்டில் ஒரு கிராம் தங்கத்திற்கு 5000 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. இதை ஏஜெண்டுகளால் திருப்பி தர முடியாமல் பலர் தலைமறைவாகினர். இன்னும் சில ஏஜெண்டுகள் தற்கொலை முடிவிற்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை