உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காளான் சாப்பிட்ட மூவர் ‘அட்மிட்’

காளான் சாப்பிட்ட மூவர் ‘அட்மிட்’

பண்ருட்டி: காளான் சாப்பிட்டு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மூவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார்,42; விவசாயி; இவரது மனைவி கவிதா,37; மகள் ஆஷிகா,12; இவர்கள், நேற்று அதேபகுதியில் பலாத்தோப்பில் விளைந்திருந்த காளானை பறித்து, வீட்டில் சமைத்து சாப்பிட்டனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் மூவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. உடன் அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ