உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துப்பாக்கி தயாரித்த மூன்று பேர் கைது

துப்பாக்கி தயாரித்த மூன்று பேர் கைது

பண்ருட்டி,:பண்ருட்டி அருகே முயல், காட்டுபன்றிகளை வேட்டையாட யூ டியூப் பார்த்து பிளாஸ்டிக் துப்பாக்கி தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் காடாம்புலியூர்-வேலன்குப்பம் சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். கல்லான்குளம் அய்யனார் கோவில் அருகில் அவ்வழியே வந்த புறங்கனி கிழக்கு தெருவை சேர்ந்த உத்திரவேல் மகன் மணிகண்டன்,25; வேலன்குப்பம் தெற்கு தெரு ராஜேந்திரன் மகன் விக்ரம்,25; பழைய பிள்ளையார்குப்பம், மாரியம்மன் கோவில் தெரு சந்தானபிரபு,32; ஆகிய 3 பேரை சோதனை செய்ததில் பிளாஸ்டிக் துப்பாக்கி, கத்தி இருப்பது தெரிந்தது. விசாரணையில், முயல், எலி, அணில், காட்டு பன்றிகளை வேட்டையாட யூ டியூப் பார்த்து பிளாஸ்டிக் துப்பாக்கி தயாரித்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து, 2 பிளாஸ்டிக் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !