உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சர்ச்சுக்கு நடந்து சென்றோர் மீது கார் மோதியதில் மூவர் பலி

சர்ச்சுக்கு நடந்து சென்றோர் மீது கார் மோதியதில் மூவர் பலி

விருத்தாசலம்,:விருத்தாசலம் அருகே, அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதியதில், தந்தை, மகள் உட்பட மூன்று பேர் இறந்தனர்; 4 பேர் படுகாயமடைந்தனர்.கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வரதராஜன்பேட்டையை சேர்ந்தவர் இருதயசாமி, 40. இவரது மகள் சகாயமேரி, 18, இருதயராஜ் மகள் ஸ்டெல்லா மேரி, 36, உள்ளிட்ட ஒன்பது பேர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுாரில் உள்ள புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவில் பங்கேற்க, நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் பாத யாத்திரையாக புறப்பட்டனர்.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, விருத்தாசலம் - சேலம் புறவழி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஒன்பது பேரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த 'மாருதி ஸ்விப்ட் கார்' இவர்கள் மீது மோதியது. இதில், ஏழு பேர் துாக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில், இருதயசாமி, சகாயமேரி, ஸ்டெல்லா மேரி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த அமுதன், சார்லஸ் உள்ளிட்ட நால்வரையும், அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தியதில், புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சங்கர், 43. என்பவர் ஓட்டிச் சென்ற கார் தான், விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்றது தெரிந்தது.கார் டிரைவர் சங்கரை, போலீசார் கைது செய்தனர். டிரைவர் சங்கர் துாக்க கலக்கத்தில், இந்த விபத்தை ஏற்படுத்தி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ