|  ADDED : டிச 26, 2024 07:00 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
புதுச்சத்திரம்,:   கடலுார் அருகே கடலில் குளிக்க வந்தவர்களிடம், மது போதையில் தகராறு செய்த வாலிபர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நேற்று முன்தினம் மாலை புதுச்சத்திரம் அடுத்த பெரியக்குப்பம் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த வாலிபர்கள் நான்கு பேர் போதையில், கடலில் குளித்த பெண்கள் உள்ளிட்டோரிடம் தகராறு செய்து தாக்கினர்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி காண்போரை அதிர்ச்சி அடைய செய்தது.  இதுகுறித்த புகாரின் பேரில், தியாகவல்லி லெனின் நகரை சேர்ந்த மாணிக்கவேல், 24, தினேஷ்,21, சரவணன்,22, பிரவீன்,24, ஆகிய நான்கு பேர் மீது புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்தனர். தினேஷ், மாணிக்கவேல், சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.