உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சஹஸ்ரநாம அறக்கட்டளை இன்று ஆண்டு விழா

சஹஸ்ரநாம அறக்கட்டளை இன்று ஆண்டு விழா

கடலுார், : கடலுார் ஹரித்ரா ஹரி சஹஸ்ர நாம அறக்கட்டளையின் 11ம் ஆண்டுவிழா, சுப்பராயலு ரெட்டியார் திருமணமண்டபத்தில் இன்று (27ம் தேதி) மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.விழாவில் மாலை 3மணிக்கு ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீலலிதா சஹஸ்ர நாமம் கூட்டுபாராயணம், 4:30 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றுதல், இறைவணக்கம், 4:40மணிக்கு அறக்கட்டளை நிர்வாக தலைவர் முத்துவரதன் ஆண்டறிக்கை வாசிக்கிறார். 5:00மணிக்கு சீர்காழி சட்டநாத பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. அறக்கட்டளைநிர்வாகக்குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை