மேலும் செய்திகள்
வி.சி., கட்சி சாலை மறியல்
19-Aug-2025
கடலுார் : நடைபாதை கடைகளை அகற்றியதால் கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலுார் லாரன்ஸ் ரோடு நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்த கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. இதனால், பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று தெருவோர வியபாரிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் குளோப், சி.ஐ.டி.யூ., தலைவர் மனோகர் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின், கமிஷனர் அனுவிடம், 'மாநகராட்சியினர் எந்தவித முன் அறிவிப்பு இல்லாமலும் கடைகளை அகற்றி விட்டதாக வியாபாரிகள்' கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதும், வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
19-Aug-2025