போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி
புவனகிரி: புவனகிரியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.புவனகிரி பஸ் நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையை இரு பக்கமும் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதன் காரணமாகவும், குறிப்பாக, கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இதனால், பொதுமக்கள் நடந்த செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.