உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏரியில் மூழ்கி மாணவர் பலி ஸ்ரீமுஷ்ணத்தில் சோகம்

ஏரியில் மூழ்கி மாணவர் பலி ஸ்ரீமுஷ்ணத்தில் சோகம்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம், வக்கரைமாரி, மேட்டுத் தெருவை சேர்ந்தவர் நிசாருல்லா, 45; தனியார் மெடிக்கல் ஷாப்பில் பணிபுரிகிறார். இவரது மகன் அப்துல் ஆசிம்,11; இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால், காலை 9:00 மணிக்கு ஸ்ரீமுஷ்ணம்- கள்ளப்பாடி சாலையில் உள்ள குன்னத்து ஏரியில் நண்பர்களுடன் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இவரின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்ட அருகில் இருந்தவர்கள், மாணவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து, நிசாருல்லா அளித்த புகாரின் பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ