உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பரங்கிப்பேட்டையில் 26ம் தேதி ரயில் மறியல்

பரங்கிப்பேட்டையில் 26ம் தேதி ரயில் மறியல்

புவனகிரி : பரங்கிப்பேட்டையில் திட்டமிட்டபடி வரும் 26ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என ரயில் பயணிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.பரங்கிப்பேட்டைசுற்று வட்டார மக்களின் நலன் கருதி, செந்துார், பாமணி உள்ளிட்ட 4 விரைவு ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று செல்ல வேண்டும். அதற்கேற்ப ரயில் நிலைய நடைமேடையை நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் வரும் 26ம் தேதி ரயில் மறியல் போராட்டம் அறிவித்தனர். அதனையொட்டி நேற்று புவனகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் கணபதி, பாண்டியன், முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம், ரயில் பயணிகள் சங்கத் தலைவர் அருள்முருகன், நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கலில்பாகவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற ரயில்வே ஆய்வாளர்கள் ராஜேந்திரன் அன்பரன் ஆகியோர், கோரிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.பேச்சுவார்த்தையில், ரயில்வே உயர் அதிகாரிகள் பங்கேற்காததை கண்டித்து வெளிநடப்பு செய்த ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், திட்டமிட்டபடி வரும் 26ம் தேதி காலை 11.30 மணிக்கு திருச்சி-சென்னை மார்க்கத்தில் வரும் சோழன் ரயில் மறியல் செய்யப்படும் என அறிவித்தனர்.அப்போது, வரும் 26ம் தேதி சிதம்பரம் சப் கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை