உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூர் கிராம விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது. கம்மாபுரம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தின் அட்மா திட்டம் சார்பில் நடந்த பயிற்சிக்கு, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். அதில், நெல் சாகுபடியில் பூச்சி தாக்குதல், உர மேலாண்மை, மண்மாதிரி பரிசோதனை குறித்து விளக்கமளித்தார். வேளாண் உதவி இயக்குனர் சுபா, வேளாண் துறை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, இயற்கை விவசாயம், பஞ்சகாவியா பயன்கள் குறித்து பேசினார். உதவி வேளாண் அலுவலர்கள் ரமேஷ், ராஜிவ் காந்தி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ், பஞ்சமூர்த்தி உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர். முன்னதாக, பயிற்சி குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கையேடு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !