உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உள்நாட்டு கூட்டின மீன் வளர்ப்பு கிராம விவசாயிகளுக்கு பயிற்சி

உள்நாட்டு கூட்டின மீன் வளர்ப்பு கிராம விவசாயிகளுக்கு பயிற்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் ஆலந்துறைப்பட்டு கிராமத்தில் உள்நாட்டு கூட்டின மீன் வளர்ப்பு குறித்து வெளிவளாக பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, நபார்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட முழு மாதிரி செயல் விளக்கத்திடல் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மீன் வளர்த்தல் செயல்முறைகள் குறித்து எடுத்துரைத்தார். பரங்கிப்பேட்டை மீன் வள துணை ஆய்வாளர் கவிதா, ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கிப்ட் திலாப்பியா மீன் குஞ்சு வளர்ப்பு முறை, விரால் மீன் குஞ்சு வளர்ப்பு, கூட்டின மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்பில் தீவனம், ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டல் குறித்து பேசினார். மேலும், மீன் வளர்ப்பில் நீர் தர மேலாண்மை, மீன் வளர்ப்பில் அரசு திட்டங்கள் குறித்து பயனாளிகளுக்கு விளக்கம் தரப்பட்டது. இதில், 30க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை